உலகம்தொழில்நுட்பம்

பூமியின் அருகே ஏற்பட்ட மர்மமான வெடிப்பு; பீதியை கிளப்பும் 2 காரணங்கள்!

விண்வெளி என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களுடன் சேர்த்து, கணக்கில் அடங்காத மர்மங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அந்த மர்மங்கள் ஆனது அவ்வப்போது பூமி வாசிகளாகிய நம் கண்களில் சிக்குவதும் உண்டு. அது பெரும்பாலும் விண்கல் அல்லது விண்மீன் அல்லது ஏரிகல் மோதலாக தான் இருக்கும்.

பூமியின் அருகே ஏற்பட்ட மர்மமான வெடிப்பு; பீதியை கிளப்பும் 2 காரணங்கள்!

அப்படியாக, சமீபத்தில் நடந்த நிகழ்வொன்று மிகவும் விசித்திரமானதாக உள்ளது. இந்த நிகழ்வானது ரஷ்ய ஆய்வாளர்களின் கண்களில் சிக்கி உள்ளது. அதாவது பூமியின் வளிமண்டலத்தில் மர்மமான வெடிப்புகள் நிகழ்வது கண்டு அறியப்பட்டுள்ளது. இந்த வெடிப்புகளின் இயற்பியல் சார்ந்த இயற்கையை விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் பல வகையான கேள்விகளை எழுப்பி உள்ளது, அந்த கேள்விகளில் ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

புறஊதா தொலைநோக்கி மூலம்!

இந்த மர்மமான வெடிப்புகள் ஆனது ரஷ்ய செயற்கைக்கோள் லோமோநோஸ்வில் (Lomonosov) நிறுவப்பட்டு உள்ள புறஊதா தொலைநோக்கி மூலம் காணப்பட்டு உள்ளது, மற்றும் இந்த வெடிப்புகள் வெளிப்படையாக வளிமண்டலத்தில் பல முறை நடந்ததுள்ளது. ஸ்பியூட்டனிக் நியூஸ் உடன் சமீபத்தில் உரையாற்றிய ரஷ்ய அரச பல்கலைக்கழகத்தின் அணு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஆன மைக்கேல் பன்சியுக், இந்த மர்மமான வானுலக நிகழ்வை பற்றி விரிவாக பேசி உள்ளார்.

ஒளிமயமான வெடிப்பு!

“எங்கள் தொலைநோக்கி உதவியுடன், நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக முக்கியமான முடிவுகளை நானாகில் பெற்றுள்ளோம். அதாவது நாங்கள் ஒரு முற்றிலும் புதிய இயற்பியல் நிகழ்வுதனை (பிஸிக்கல் ஃபினாமினா) கண்டு அறிந்து உள்ளோம், இருந்தாலும் கூட அந்த நிகழ்வின் பிஸிக்கல் நேச்சரை (இயற்பியல் சார்ந்த இயற்கை) இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக, லோமோநோஸ்வின் பயணம் ஆனது பல டஜன் கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் போது, கூறப்படும் ஒளிமயமான ‘வெடிப்பு’ பலமுறை நிகழ்ந்து, பதிவும் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அது அனைத்துமே தெளிவாக உள்ளது. அதில் எந்த புயலும், எந்த மேகங்களும் இல்லை” என்று அவர் கூறி உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு!

ரஷ்ய நாட்டு செயற்கைக்கோள் ஆன லோமோநோஸ்வ் ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டு பூமியின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது. அதன் முதன்மை நோக்கமானது பூமியின் மேல் வளிமண்டலத்தில் நடக்கும் நிலையற்ற நிகழ்வைக் கவனிக்க வேண்டியது ஆகும். அத்துடன் சேர்த்து நமது பூமி கிரகத்தின் காந்த மண்டலத்தின் கதிர்வீச்சு தன்மையை ஆராயும் நோக்கத்தையும் இந்த செயற்கைக்கோள் கொண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னிய படையெடுப்புக்கு அடையாளமாக இருக்கலாம்!

தற்போது வரையிலாக, புவியின் வளிமண்டலத்தில் நாடாகும் இந்த மர்மமான ஒளி வெடிப்பிற்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகள் விளக்கத்தை வழங்க முடியவில்லை. இருந்தாலும் கூட சதித்திட்டக் கோட்பாட்டாளர்களின் ஒரு பிரிவினர், இந்த மர்மமான நிகழ்வுகள் ஆனது வரவிருக்கும் அன்னிய படையெடுப்புக்கு (ஏலியன் படையெடுப்பு) அடையாளமாக இருக்கலாம் என்று வெளிப்படையாக கூறிவருகின்றனர்.

நேரடியாக தாக்கும் முன்!

அதாவது, இந்த சதி கோட்பாட்டாளர்களின் படி, ஏலியன்கள் நமது புவியின் வளிமண்டலத்தை அடைந்திருக்கலாம், மேலும் அவர்கள் மனிதர்களையும் பூமியையும் நேரடியாக தாக்கும் முன், தங்களது சக்திவாய்ந்த ஆயுதங்களை பரிசோதனை செய்யலாம், அவைகள் தான் இந்த மர்மமான வெடிப்புகளுக்கு காரணம் என்கிறாரகள்.

உலகின் கடைசி நாள் என்று கூறப்படும் டூம்ஸ்டே!

வேறு சதித்திட்ட கோட்பாளர்கள், இந்த விளக்கமில்லாத வான்வெளி நிகழ்வுகள் ஆனது தவிர்க்க முடியாத அழிவின் அடையாளமாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். இந்த கோட்பாட்டாளர்களின் படி, உலகம் அதன் இறுதி நாட்களை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இது சமீபத்திய சூப்பர் ப்ளட் மூன் நிகழ்வுடன் தொடர்பு கொண்ட ஒரு நிகழ்வாகும் என்றும் உலகின் கடைசி நாள் என்று கூறப்படும் டூம்ஸ்டேவிற்கான ஒரு அறிகுறிதான் இது என்றும் கூறுகின்றனர்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!