தொழில்நுட்பம்

கணிதத்தை இலகுவாக்கும் App

நாம் நினைத்துக்கூட பார்க்காத எத்தனையோ பல வசதிகளை இன்றைய ஸ்மார்ட் போன்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடிகிறது.

நாம் எழுதக்கூடிய கணித சமன்பாடுகளை தீர்த்துத் தரும் ஒரு அருமையான ஆப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

பல மணித்தியாலங்கள் செலவழித்து நாம் செய்யக்கூடிய கணித பிரசினங்களை மிகக் குறுகிய நேரத்தில் தீர்த்துக்கொள்ள உதவுகின்றது “மை ஸ்கிரிப்ட் கால்குலேட்டர்” எனும் android / iphone app. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து எந்த ஒரு ஆண்ட்ராய்டு போனிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் விஷேட அம்சம் என்னவெனில் நாம் கையால் எழுதக்கூடிய கணித சூத்திரங்களை இது டிஜிட்டல் எண்கள், குறியீடுகளாக மாற்றி அவற்றுக்கான விடையை தருகின்றது.

மூலம் மிக எளிமையான கணக்குகள் தொடக்கம் மிகவும் சிக்கலான கணித சூத்திரங்கள் வரை இதன் மூலம் மேற்கொள்ள முடியும்.

நீங்கள் எழுதிய கணித சமன்பாடுகளை அன்டூ (Undo,) ரீடூ (Redo) செய்ய முடியும்.

இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-களில் பயன்படுத்தலாம்.

இந்த செயலி ஆதரவளிக்கும் கணிதச் செய்கைகள்:

  • அடிப்படை கணிதச் செய்கைகள்: +, -, x, ÷, +/‒, 1/x
  • இதர செய்கைகள்: %, √, x!, |x|
  • கணித மாறிலிகள்/அடுக்குச்சார்பு: ℯx, xy , x2
  • அடைப்புக்குறி: ()
  • திரிகோண கணிதம்: cos, sin, tan
  • நேர்மாறு முக்கோணவியல்: acos, asin, atan
  • மடக்கைகள்: ln , log
  • மாறிலிகள்: π, ℯ, Phi

இந்த செயலி அடிப்படை கணிதச் செய்கைகளுக்கும் ஆதரவளிப்பதால் இது ஆசிரியர் மாணவர்களுக்கு மாத்திரம் இன்றி அனைத்து தரப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்களும் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் ஸ்மார்ட் போன் ஒன்றை பயன்படுத்துபவர் எனின் இதனை இலவசமாக நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Download

Android

IPHONE

Comment here

error: Content is protected !!
Don`t copy text!