தொழில்நுட்பம்விளையாட்டு

உங்களது கம்ப்யூட்டரில் PUBG LITE இன்ஸ்டால் செய்வது எப்படி?

கேமிங் துறையில் அவ்வப்போது சில கேம்கள் பலரது கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு வெற்றிகரமான கேம்கள் கேமர்களை ஈர்த்து அதிக நேரம் அவர்களை விளையாட செய்து, அதற்கென தனி குழுக்கள் மற்றும் அதன் ப்ரியர்கள் ஒன்று கூடும் அளவிற்கு பிரபலமாகிவிடும். இவ்வாறு அதிக பிரபலமாவதை விட சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ஒரு கேமினை விளையாட துவங்கி, அவர்களது அன்றாட நேரத்தை பறித்தால் எப்படி இருக்கும்?

 

2017 டிசம்பரில் பப்ஜி அறிமுகமானது. அதன்பின் பப்ஜி விளையாடுவோரை கடக்கமால் ஒரு நாளையும் கழிக்க முடியாத சூழலை பலரும் அனுபவித்திருப்பர். பல சூழல்களில் சிலர் குழுக்களாக ஒன்றுகூடி பப்ஜி விளையாடுவதை பார்த்திருப்போம். அதிகளவு பிரபலமானதால் இந்த கேமின் கம்ப்யூட்டர் மற்றும் கேமிங் கன்சோல்களுக்கென வெவ்வேறு வெர்ஷன்கள் வெளியாகி இருக்கின்றன. இவைதவிர பப்ஜி லைட் எனும் வெர்ஷனும் கிடைக்கிறது.

ப்ளூஹோல் மற்றும் பப்ஜி கார்ப்பரேஷன் தங்களது கேமின் லைட் பதிப்பு கம்ப்யூட்டர்களுக்கு வழங்கப்படுகிறது என சமீபத்தில் அறிவித்தது. பப்ஜி லைட் பதிப்பின் பீட்டா வெர்ஷன்கள் தற்சமயம் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மட்டும் கிடைக்கிறது.

பப்ஜி லைட் கம்ப்யூட்டர் வெர்ஷன் அதன் முந்தைய பதிப்பை விட குறைந்த அளவு மெமரி கொண்டிருக்கிறது. கோர் i3 பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் லேப்டாப்களிலும் பப்ஜி லைட் கேமினை சீராக விளையாட முடியும். இந்த பதிப்பை விளையாட விரும்புவோருக்கு பிரத்யேக ஜி.பி.யு. எதுவும் தேவைப்படாது. இதன் சிங்கிள் சர்வர் மட்டும் 35 பேர் விளையாட கூடியதாக இருக்கிறது.

கேமினை விளையாட முடியும் என்றாலும், இதை கொண்டு மற்றவர்களுக்கு போட்டியை ஏற்படுத்தவோ அல்லது இதன் பெரிய வெர்ஷனை பயன்படுத்துவோருடன் விளையாட முடியாது. இந்த கேம் விளையாடுவோர் பப்ஜி லைட் பி.சி. எடிஷன் விளையாடுவோருடன் மட்டுமே விளையாட முடியும்.

பப்ஜி லைட் பி.சி. சிஸ்டம் தேவையானவை:

– விண்டோஸ் 7, 8, 10 64 பிட்

– கோர் ஐ3 2.4 ஜிகாஹெர்ட்ஸ்

– 4 ஜி.பி. ரேம்

– ஜி.பி.யு. இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 4000

– 4 ஜி.பி. ஹெச்.டி.டி.

தேவையான பரிந்துரைகள்:

– விண்டோஸ் 7, 8, 10 64 பிட்

– கோர் ஐ5 2.8 ஜிகாஹெர்ட்ஸ்

– 8 ஜி.பி. ரேம்

– என்விடியா ஜீஃபோர்ஸ் ஜி.டி.எக்ஸ். 660 அல்லது ஏ.எம்.டி. ரேடியான் ஹெச்.டி. 7870

– 4 ஜி.பி. ஹெச்.டி.டி.

கேமின் பீட்டா சோதனை தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இந்த கேமினை இந்தியாவிலும் விளையாட முடியும். இதை செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

1 – கூகுள் க்ரோம் லான்ச் செய்யவும்.

2 – பப்ஜி லைட் பி.சி. தாய்லாந்து வலைதளம் செல்ல வேண்டும்.

3 – வலைதளத்தை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்க்கவும். இவ்வாறு செய்ததும் பப்ஜி லைட் இன்ஸ்டாலரை கம்ப்யூட்டரில் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

4 – வலைதளத்திற்கு சென்று சைன்-அப் செய்து Apply for ID பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

5 – இனி வி.பி.என். ஒன்றை இன்ஸ்டால் செய்து லொகேஷனை தாய்லாந்திற்கு மாற்ற வேண்டும்.

6 – பப்ஜி இன்ஸ்டாலரை ஸ்டார்ட் மெனுவில் இருந்து லான்ச் செய்து நீங்கள் உருவாக்கிய ஐ.டி. மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.

7 – டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்து கேம் டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்கவும்.

8 – இனி கேமினை விளையாட பிளே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

9 – இறுதியில் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு கேமினை விளையாட துவங்கலாம்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!