விளையாட்டு

சொந்த பெயரில் பெவிலியன்! திறந்து வைக்க மறுத்த டோனி ?

தனது பெயரில் தொடங்கப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க மறுத்துள்ளார் இந்திய அணி வீரரான மகேந்திர சிங் டோனி.

கிரிக்கெட் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் டோனி சமீபத்தில் பார்முக்கு திரும்பியுள்ளார்.

தொடர்ந்து உலக கிண்ணப் போட்டிகளில் அசத்திய பின்னர் ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாளை ராஞ்சியில் இந்தியா- அவுஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது.

டோனியை கௌரவிக்கும் விதத்தில் மைதானத்தின் தெற்கு ஸ்டாண்டுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதை திறந்து வைக்க டோனியை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் அழைத்த போது, அன்பாக மறுத்துள்ளார்.

அதாவது சொந்த மண்ணில் அந்நியக்காரன் போல் உணரவைத்துவிடும் என்பதால் மறுத்துவிட்டாராம்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!