இணையம்தொழில்நுட்பம்

குரோம் உலாவியில் Dark Mode வசதி!

மொபைல் பயனர்கள் நீண்ட நேரம் இணையத்தளப் பாவனையில் ஈடுபடுவதனால் கண்களுக்கு அதிக அளவில் அசௌகரியங்கள் உண்டாகின்றன.

இதனை தவிர்ப்பதற்கு இருண்ட பின்னணியை கொண்ட Dark Mode வசதியினை அறிமுகம் செய்ய கூகுள் குரோம் தீர்மானித்திருந்தது.

இதன்படி தற்போது குறித்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வசதியினை Chrome Canary எனும் புதிய பதிப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.

இணைய உலாவி ஒன்றில் இவ்வசதி அறிமுகம் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

இதற்கு முன்னர் சாம்சுங் ஆனது தனது இணைய உலாவியில் இவ்வசதியினை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தது.

அதேபோன்று பேஸ்புக் மெசஞ்சர், டுவிட்டர் போன்ற அப்பிளிக்கேஷன்களிலும் இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!