சினிமா

தமிழ்த்திரையுலகில் முதல் முயற்சி!! விஜய் ரசிகர்களால் வெளியிடபட்ட சர்கார் இசை

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் வழக்கமாக படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மேடை மீது ஏறி இசையை வெளியிடாமல் ரசிகர்கள் அனைவரும் வெளியிடும் வகையில் செய்திருந்தனர். இதற்கு டிஜிட்டல் ஆடியோ வெளியீட்டு விழா எனப் பெயர் சூட்டியிருந்தனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தியா, பிரசன்னா ஸ்டெப் பை ஸ்டெப்பாக வழிநடத்த அரங்கிலிருந்த ரசிகர்கள் இசையை வெளியிட்டனர்.

முதலில் sarkar.sunpictures.in என்ற முகவரியை மொபைல் பிரவுசரில் டைப் செய்யுமாறு அறிவுறத்தப்பட்டது. ரசிகர்கள் அதை பின்பற்றியவுடன் ஹோம் பேஜில் நடிகர் விஜய்யின் சர்கார் ஃபோட்டோ வந்தது. பின்னர் ரசிகர்களுக்கு ஆள்காட்டி விரலை காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ரசிகர்களும் ஆவலுடன் அதை செய்ய, முன் வரிசையில் இருந்த நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என அனைவரும் ஒரு விரல் காட்டினர்.

பின்னர் லாஞ்ச் ஆடியோ என்று திரையில் தோன்றிய பொத்தானை அழுத்துமாறு சொல்லப்பட்டது. அவ்வாறு அழுத்த சர்கார் இசை வெளியிடப்பட்டது.

உங்கள் சர்கார் உங்கள் கையில் என தொகுப்பாளினி கூறி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். சர்கார் ஆடியோவை லாஞ்ச் செய்த அனைத்த ரசிகர்கள் மொபைலிலும் சர்கார் ஆல்பம் தரவிறக்கம் ஆனது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!