சினிமா

முதல் பாடல் பதிவு செய்யும் போது மின்சார தடை இன்று உலகமே அவருக்கு பெரும் படை!

Base 1

1976ல் ‘அன்னக்கிளி’என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த இசை ஞானி இளையராஜா ஆரம்பகாலகட்டத்தில் நாடகக்குழுக்களோடு இணைந்து இசைக்கச்சேரிகளிலும்,நாடகங்களிளும் இசையமைத்து வந்தார்.

1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சௌத்ரியிடம் பணிபுரிந்த இசை ஞானி தொடர்ந்தும் கன்னட இசையமைப்பாளரான ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்து இசைப்பணிகளில் ஈடுபட்டார்.

அக்காலப்பகுதியில் அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி,இசையமைத்தும் வந்துள்ளார்.

“மேஸ்ட்ரோ”என்றும் அழைக்கப்படும் இசை ஞானிஇந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருதினை நான்கு முறையும் ,தேசிய விருதையும், நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும், மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை நந்தி விருதையும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இசை ஞானியை அவரின் திறமையை கண்டு தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் பஞ்சு அருணாச்சலமாவார் .1975ல் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் சகோதரர் தயாரித்த ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் முதன் முதலில் இசையமைப்பாளராக அவரை ஒப்பந்தம் செய்தார். அந்த திரைபடத்தில் வந்த ‘மச்சானப் பாத்தீங்களா பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைஅக்காலத்தில் பெற்றுத்தந்தது, அதுவே இசை ஞானி யின் அடுத்த அடுத்த கட்டத்துக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது எனலாம்.

எனினும் முதல் படமான அன்னக்கிளி படத்தை தயாரித்த பஞ்சு அருணாச்சலதின் சகோதரர் ஆரம்பத்தில் இசைஞானிமீது நம்பிக்கை இல்லாதவராகவும் பஞ்சு அருணாச்சலதிடம் வேறு ஒருவரை நாம் ஒப்பந்தம் செய்யலாம் என்றும் அடிக்கடி சொல்லிவந்தார். ஆனால் அருணாச்சலம் இந்த புதிய பையனுக்கு வாய்ப்பை வழங்கவேண்றும் என்று பிடிவாதமாக இருந்தன் காரணமாக அந்த வாய்ப்பு இசை ஞானிகிக்கு கிட்டியது ,எனினும் முதல் பாடலை முதன் முதலில் பதிவு செய்யும் போது துரதிஸ்ட்டமாக மின்சாரம் தடைப்பட்டது. அப்போது சகுனம் சரி இல்லை என்று அங்கு இருந்த பலரும் சொல்ல மனமுடைந்த இசைஞானி அந்த அறையில் மனமுடைந்து ஒரு ஓரமாக அமைதியாக இருந்ததாக சொல்லப்டுகின்றது ,மீண்டும் மின்சாரம் வந்த பிறகே இசை அமைத்து அன்னக்கிளி மூலம் தமிழ் திரை உலகுக்கு மாபெரும் இசை மேதையாக உலகமறிய தன்னை உயர்திக்கொண்டார் என்பது முக்கியமான விடயம்.இன்று இசைக்கு பிறந்தநாள்.

error: Content is protected !!
Don`t copy text!