சினிமா

யார் இந்த நேசமணி அவருக்கு என்ன நடந்தது ?

Base 1

இந்தியாவில் சமூக இணைத்தளங்கள் அரசியல்,சினிமாவில் அவ்வப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் சமூக ஊடகங்களாக இருக்கின்றன.

இன்று இந்தியாவின் இரண்டாவுது முறையாகவும் பிரதமராக பதவி பிரபிரமாணம் செய்யும் நரேந்திர மோடி கூட தனது முதலாவது பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திலும் சமூக வலைத்தளங்களிலயே சிறப்பான பிரச்சாரங்களை செய்து வெற்றி பெற்றார்,

இந்த நிலையில் மோடியின் பிரதமர் பதவி தொடர்பான ட்ரென்டுகள் சமூக வலைத்தளங்களில் #ModiSarkar2 மற்றும் #ModiSwearingIn ஆகிய ஹேஷ்டேக்குகளைப்பயன்படுத்தி வந்தாலும் #pray_for_nesamani ஹேஷ்டேக் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.அது உலகளவிலும் ஹேஸ் டெக்கின் மூலம் முன்னணியில் உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம் அப்படி ட்ரெண்ட் ஆகும் அந்த நேசமணி யார் ? அவர் தான் நம்ம வைகை புயல் வடிவேலு ,இறுதியாக மெர்சல் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் கலக்கி இருந்த அவர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அவரது நகைசுவைகள் சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் நகைச்சுவைக்காட்சி தான் தற்போது Trending இல் வளம் வந்துகொண்டிருக்கிறது இந்த திரைபடத்தில் தளபதி விஜய்,சூர்யா,ரமேஷ்கண்ணாவுடன் வடிவேலு நேசமணி எனும் கதா பாத்திரத்தில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்.

நேசமணி கதாபாத்திரத்தின் தலையில் சுத்தியல் விழுந்து அடிபடும் காட்சியை மையமாக வைத்து நேற்றிலிருந்தே #pray_for_nesamani ஹேஷ்டேக் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
#pray_for_nesamani

error: Content is protected !!
Don`t copy text!