சினிமா

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை மகிழ்ச்சியான செய்தி ?

தளபதி விஜயின் புதிய படம் 63 தொடர்பான முக்கிய விடயம் ஒன்று இன்று 06 மணி அளவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜயின் மூன்றாவது ஹட்ரிக் வெற்றிக்காக இப்பொழுது 63 பட குழு கடினமாக உழைத்துக்கொண்டிருக்கின்றது.

கால் பந்தாட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் நயன்தாரா வில்லு படத்துக்கு பிறகு விஜயுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது மேலும் படத்துக்கு வலுசேர்த்துள்ளது.

இந்தநிலையில் தளபதி விஜயின் 45வது பிறந்தநாள் எதிர்வரும் 22 திகதி வருவதால்,அதற்கான கொண்டாட்டங்கள் இந்த மாதம் முழுதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் விஜயின் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி படுத்த இன்று தளபதி 63படக்குழு மாலை முக்கிய விடயம் ஒன்று வெளிவரும் என்று அறிவித்திருக்கின்றார்கள்,அது இந்த படத்தின் பிரஸ்ட் லூக்கா அல்லது படத்தின் பெயரா என்று ரசிகர்கள் அவளோடு எதிர் பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.

error: Content is protected !!
Don`t copy text!