கட்டுரைசமூகம்சினிமா

சுனாமி ஆழிப்பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்று

சுமார் 2.30 லட்சத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழிப் பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004ம் ஆண்டு டிசம்பா் 26ம் தேதி அதிகாலை சுமார் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சாரிந்தன. ஆய்வாளா்கள் 10 நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர். உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவில் நிலநடுக்கம் பதிவானதில்லை என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனர். ரிக்டா் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை நிலநடுக்கம் பதிவானது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த  ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் மாத்திரம் 35 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன் 900,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்

2004ம் ஆண்டில் சுனாமி தாக்கியபோது இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சாரிக்கை கருவிகள் இல்லை. இந்தோனேசியா கடல் பகுதியில் இருந்த எச்சாரிக்கை கருவியும் செயல்படவில்லை. சுனாமி வந்த பிறகு இந்திய பெருங்கடலோரம் உள்ள நாடுகள் எச்சாரிக்கை கருவிகளை நிறுவியுள்ளன. 14 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஆழிப்பேரலைகள் இந்திய கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது. தற்போது உள்ள நவீன கருவிகள் அப்போது செயல்பாட்டில் இருந்திருக்கும் பட்சத்தில் லட்சக்கணக்கான சொந்த பந்தங்களை இழந்து அனாதையாக நின்றிருக்க வாய்ப்பில்லை. 

Comment here

error: Content is protected !!
Don`t copy text!