கல்வி

தெற்காசியாவில் சிறந்த பாடசாலைக் கட்டமைப்பு இலங்கையில் !

தொழில்நுட்ப அறிவு மற்றும் கல்வியால் பூரணத்துவமடைந்த தெற்காசியாவின் சிறந்த பாடசாலை முறைமையை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை´எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நீர்மாணிக்கப்பட்ட 250 பாடசாலைகளைக் கட்டிடங்களைத் திறந்து வைக்கும் பிரதான நிகழ்வில் பிரதமர் இதனைக் தெரிவித்தார்.

21ஆவது நூற்றாண்டின் தொழில்நுட்பத்திற்கு முகம்கொடுக்கும் சவாலை வெற்றிகொள்ளும் சந்ததியினரை உருவாக்குவதற்காக கல்வித்துறையில் நவீன மயமாக்கல் அவசியமாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை´செயற்திட்டத்தின் கீழ் 200 பாடசாலைக் கட்டிடங்கள் இதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதனை அடுத்து 250 பாடசாலைக் கட்டிடங்களை ஒரே நேரத்தில் திறந்து வைக்கும் இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் அமைந்திருந்தது.

error: Content is protected !!
Don`t copy text!