மலையகம்

சென்றெகுலர்ஸ் தோட்ட அன்னை தெரேசா முதியோர் கழகத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா

Base 1

லிந்துல_சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இயங்கும அன்னை தெரேசா முதியோர் கழகத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா கழகத்தின் தலவைர் மாரிமுத்து அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் திரு.புஸ்பராஜ் தொழிலாளர்,தேசிய சங்கத்தின் மெராயா பகுதி அமைப்பாளர் திரு.ரமேஸ், பிரிடோ நிறுவனத்தின் முன்னால் இணைப்பாளர் திரு.சு.இராசு,தோட்ட நிர்வாகத்தின் சார்பில் திரு.அந்தனிராஜ் ,திரு.இலங்கோ ஆகியோரும் நு/சென்றெகுலர்ஸ் த.வி ஆசிரியர்களான திரு.ரவிச்சந்திரன்,திருமதி.பரஞ்சோதி உற்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழாவில் பங்கு கொண்ட மூத்த பிரஜைகள் அனைவருக்கும் பெருமதியான பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு நிகழ்விற்கு உதவிய வர்களுக்கு நன்றியும் பாராட்டப்பட்டது.

தகவல் -படங்கள், அருட்செல்வம்

error: Content is protected !!
Don`t copy text!