மலையகம்

செயற்கை நுண்ணறிவு துறையில் சாதித்த ஹைலண்ட்ஸ் கல்லூரி பழைய மாணவர்!

Base 1

10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடும் மற்றும் உலக தமிழ் தொழில் முனைவோர் மாநாடும் அமெரிக்கா சிகாகோ நகரில் ஜூலை 4, 5, 6, 7 நாட்களில் நடந்தேறியது. இதில் 6000ற்கு மேற்பட்ட கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தமிழ் அறிஞர்கள் உலகெங்கிலும் இருந்து பங்கேற்றார்கள். ஐ.நா பிரதிநிதி நவநீதம்பிள்ளை, அமெரிக்க, கனடிய, ஜேர்மன், ஆஸ்திரேலிய, இந்திய, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழிலதிபர்கள் உள்பட பல தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

ஹைலண்ட்ஸ் கல்லூரி பழைய மாணவரும் செயற்கை நுண்ணறிவு துறை (Artificial Intelligence) நிபுணருமான சிவா நடராஜா “செயற்கை நுண்ணறிவினால் நோய்களுக்கு சிகிச்சை முறை“ (Artificial Intelligence in Healthcare) என்ற தலைப்பில் உரை ஆற்றின்னார்.

சிவா நடராஜா அமெரிக்காவில் இயங்கும் ஜோகோ ஹெல்த் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் ஆவார். “ஜோகோ” (JOGO) பக்கவாதம் மற்றும் மூளைவாத நோய்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலம் சிகிச்சை அளிக்கும் ஒரு உபகரணம் ஆகும். இதற்கு முன்னர் சிவா நடராஜா தொடங்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய மருந்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் வாங்கியது. சிவா நடராஜா அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்தில் இரண்டு காப்புரிமை பெற்றவர். இவரின் இரு கண்டுபிடிப்புகள் இணைய பாதுகாப்பை முற்றிலும் மாற்றி வடிவமைக்க உதவியது.

ஹைலண்ட்ஸ் கல்லூரி பழைய மாணவரான சிவா நடராஜா, பேராதனை பல்கலைகழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பின் ஹார்வெட் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தவர். இவர் அமெரிக்காவில் இரண்டு புத்தகங்களும் எழுதி இருக்கிறார்.

சிவா நடராஜா அவர்கள் ஆரம்ப கால ஹைலண்ட்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் முன்னின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைலண்ட்ஸ் கல்லூரி சமூகமும் பழைய மாணவர் சங்கமும் இவரால் பெருமைகொள்கிறது. இவரின் மருத்துவம் மற்றும் இணைய பாதுகாப்பு தொழில்நுட்பம் சம்பந்தமான கண்டுபிடிப்புகள் மென்மேலும் விரிவடைந்து செல்ல ஹைலண்ட்ஸ் கல்லூரி வாழ்த்துகிறது.

நன்றி- ஹைலண்ட்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கம்

error: Content is protected !!
Don`t copy text!