மலையகம்

நல்லத்தண்ணி தோட்ட இளைஞர் கழகத்தால் முன்னெடுப்பட்ட காமன் கூத்து..!

அக்கரப்பத்தனை நல்லத்தண்ணி தோட்டத்தில் காமன் கூத்து நிகழ்வு கடத்த 10ம் திகதி இடம்பெற்றுள்ளது .

கடந்த வருடம் போன்றே இந்தவருடமும் இளைஞர்களின் முழு முயற்சியின் மூலமே இது சாத்தியமாகி இருக்கின்றது.

அங்குள்ள இளைஞர் கழகமான ஜெயசக்தி இளைஞர் கழகமே முன்னின்று இந்த காமன் விழாவை செய்திருக்கின்றது.குறிப்பாக கேதீஸ் ,தினேஷ் ,நிதர்ஷன் ,வணராஜா ,ரகுபதி ,சூர்யகுமார் ,முருகேசு ,மோகன் போன்ற கழக உறுப்பினர்களாலே முழு முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பாரம்பரிய கலைகள் அழிந்து வரும் நிலையில் பெரும்பாலான படித்த சமூகம் அவற்றை விட்டு நாகரீகம் என்ற போர்வையில் சென்று விடுகின்ற நிலையில் இன்னும் சில இளைஞர்கள் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அப்படித் தான் அக்கரப்பத்தனை நல்லத்தண்ணி தோட்ட இளைஞர்களும் கடந்த வருடம் போலவே இந்தவருடமும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இம்முறையும் காமன் கூத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள். குறிப்பாக பெரும்பாலான இளைஞர்களும் சிறுவர்களு ம் வேடம் ஏற்று இந்த காமன் கூத்தை சிறப்புற செய்திருக்கின்றார்கள். மலையக பாரம்பரிய கலையான காமன் கூத்தை சிறப்பாக செய்த ஜெயசக்தி இளைஞர் கழகதுக்கு மலையகம்.lk இணைய குழுமம் வாழ்த்துக்களையும் , பாராட்டுகளையும் தெரிவிகிக்கின்றது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!