மலையகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (12) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்தக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒரு வருடத்திற்கு மாத்திரமே இந்தக் கொடுப்பனவை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க  சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!