மலையகம்

மோசமான நிலையில் ஹோல்புரூக் பிரதான பாதை..

அக்கரப்பத்தனை ஹோல்புரூக் நகரத்தில் பிரதான பாதையில் இருமடங்கிலும் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பல்வேறு மக்களும்,பாடசாலை மாணவர்களும் இந்த நகரத்துக்கே வந்து செல்கின்றனர்.

எனினும் முறையாக அமைக்கப்படாத கால்வாய்களினால் மழை காலங்களில் பிரதான பாதையில் மழை நீர் தேங்கி இருப்பதோடு,குப்பைகளும் நிறைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த பாதைகளை சீரமைத்து தரும் மாறும் குறித்த நகர வாசிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!