மலையகம்

லிந்துலை ராணிவத்தை பாதையின் நிலை…

ராஹன்வத்தை – ராணிவத்தை பாதை மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

குறித்த பாதையானது 6 தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையாக, அன்றாடம் ஆயிர கணக்கானோர் பாவிக்கும் குறிப்பாக அதிகமான பாடசாலை செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் நோயாளிகள் இப்பாதை ஊடாகவே பிரயாணிக்க வேண்டியுள்ளது

குறித்த பாதை நீண்ட காலமாக செப்பணிடபடாமல் பாரபட்சம் காட்டி வருகின்றனர் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

received_1885276195073694

இப்பாதையின் நிலை குறித்து கட்சி தலைவர்கள் கவனத்திக்கு கொண்டு சென்றும் இன்னுமே சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்பாதை நாகசேனையில் இருந்து இல்டன்னோல் த.வி அமைந்துள்ள இடம் வரை காபட் இடப்பட்ட போதும் அதிலிருந்து ராணிவத்தை வரையான 3km பாதை மிகமிக மேசமான நிலையில் காணப்படுகின்ற போதிலும் இப்பாதையை செப்பனிட்டு தருவதற்கு எந்த அரசியல் கட்சிகளும் முன்வரவில்லையென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாதை நிலை அறிந்து செப்பனிட்டு தருமாறு இப்பகுதி பொது மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!