செய்திகள்

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான செம்பு தொழிற்சாலை சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Base 1

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிக்கு சொந்தமானதாக கூறப்படும் வெல்லம்பிட்டி செம்பு தொழிற்சாலையில் பணியாற்றிய சம்பவத்துடன் தொடர்புபட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களுள் ஒருவாரன கருப்பையா ராஜேந்திரன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் மற்றும் வாக்கு மூலங்கள் பெறுவது தொடர்பில் பணிகள் இடம்பெற்று வருவதாக இந்த பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!