ஆன்மீகம்செய்திகள்

கொழு.13 ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தன்சல் நிகழ்வுகள்

வைகாசி விசாக பூரணை தினத்தை முன்னிட்டு, கொழும்பு 13 கதிரேசன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றது.

வைகாசி விசாக பூஜைகளைத்தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் புத்தபெருமானுக்கு பிரித் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மாலை வேளையில் தானசாலை (தன்சல்) வழங்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Don`t copy text!