செய்திகள்

சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற இருவர் கைது ?

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானுடன் ஆயுதப்பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவரை வெலிமடையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இவர் சஹ்ரானுடன் அம்பாந்தோட்டையில் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டவர் என்று குறிப்பிடப்படுகின்றது.

மேலும் மற்றுமொரு நபர் நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சஹ்ரானின் முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!