செய்திகள்

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக ருவான் குலதுங்க பதவியேற்பு..

Base 1
தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இவர் இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக முன்னர் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், கடந்த வாரம் குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!
Don`t copy text!