செய்திகள்

நாட்டில் மீண்டும் மின்சார தடை ?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைக்கிடையே மின்சார விநியோகம் தடைப்படக்கூடும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

80 பில்லியன் ரூபா கடன் தொகைக்கும் மேலதிகமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து, இலங்கை மின்சார சபை எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருவதாகவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த கடன் எல்லையை மீறி எரிபொருள் விநியோகிக்கப்பட்டதை அடுத்து, மின்சார சபைக்காக எரிபொருள் விநியோகிக்கும் தன்னியக்க இயந்திர கட்டமைப்பினூடாக, விநியோக நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Don`t copy text!