செய்திகள்

நாட்டு தலைவர்களுக்கு முதுகெழும்பு இல்லை – கர்தினால் ஆண்டகை.

Base 1

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சர்வதேச தேவைக்காக நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை மீள ஆரம்பிக்கும் நிகழ்வின் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை எனவும் இது நாட்டினுள் கலவரம் ஒன்றை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வழிதவறிச் சென்ற இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவித்தார்.

தலைவர்கள் சர்வதேச சக்திகளுக்கு தேவையான முறையில் செயற்படுவதாகவும், வளம்மிக்கதொரு நாட்டை மேலும் சக்திமிக்கதாக மாற்ற அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்போது பேராயர் குறிப்பிட்டார்.

மிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு பிரிவை தற்போதைய அரசாங்கம் பலவீனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை எனவும் இந்த சம்பவங்களுக்கு காரணமான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதோடு பொறுப்பான முறையில் நாட்டை ஆட்சியும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!
Don`t copy text!