செய்திகள்மலையகம்

நோர்வூட் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

Base 1

15 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நோர்வூட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி குறைமாத சிசுவொன்றை பிரசவித்துள்ளதாகவும் அந்த சிசு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர் கினிகத்தேன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நோர்வூட் பகுதியில் இருந்து கினிகத்தேனவிற்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போதே சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் மற்றும் கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!