செய்திகள்

பதில் அமச்சர்கள் இன்று நியமனம்

அண்மையில் பதவி விலகிய மூன்று அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பதில் அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ரிசாத் பதியுதீன்,கபீர் ஹசீம்,ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் தங்களது பதவிகளில் இருந்து அண்மையில் கூட்டாக விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி நகரத் திட்டமிடல்,நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன,நகரத் திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றும் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண கைத்தொழில்,வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

.

error: Content is protected !!
Don`t copy text!