கல்விசெய்திகள்

வத்தளையில் தமிழ் பாடசாலை தேசிய பாடசாலையாக மாற்றம் பெறுகின்றது

வத்தளை பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மாணவர்களுக்காக அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் பாடசாலை இவ்வருடம் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி முதல் தரம் ஒன்றுக்காக அறுபத்தி நான்கு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகின்றது.

இதன் அடுத்தகட்டமாக தரம் 13 வரை தரமுயர்த்தப்படவுள்ளதோடு தேசிய பாடசாலையாகவும் மாற்றம் பெறவுள்ளது.

இந்து தேசிய பாடசாலைக்கான வளாகம் கல்வி அமைச்சுக்கு கையளிக்கப்படுதலும், தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சால் அதற்கு வழங்கப்படும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், இன்றைய தினம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு புகையிரத நிலைய வீதி, ஹுனுப்பிட்டிய, வத்தளையில் அமைந்துள்ள அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
ஊடக அனுசரணை : மலையகம்.lk

error: Content is protected !!
Don`t copy text!