செய்திகள்

விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் : நிட்டம்புவ நகரில் வாகன நெரிசல்

நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாடிகளை கொண்ட இந்த விற்பனை நிலையத்தின் இரண்டாம் மாடியில்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக கம்பஹா தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீப்பரவல் காரணமாக நிட்டம்புவ நகரை சுற்றி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

 

Comment here

error: Content is protected !!
Don`t copy text!