செய்திகள்நுவரெலியா

28 வயதுடைய பெண் நேற்றிரவு லிந்துலை பகுதியில் பொலிஸாரால் கைது..

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிவத்தை தோட்டத்திற்கு வெள்ளவத்தையில் இருந்து வந்ததாக கூறிய பெண் ஒருவர் நேற்றிரவு 11 மணியளவில் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

 

28 வயதுடைய குறித்த பெண் நேற்றிரவு லிந்துலை பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் லிந்த்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என பொலிஸார் தெரிவித்தனர் .

 

மேற்படி பெண் குருநாகல் பகுதியில் வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் கொழும்பு கொச்சிக்கடை பகுதிகளில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் இங்கு வந்தமைக்கான காரணத்தைக் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்த பெயரை கொண்ட நபரின் வீட்டிற்கு வருகை தந்ததாக கூறிய போதிலும் அவ்வாறான பெயருடைய எவரும் இராணிவத்தை பகுதியில் இல்லையென லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். 

 

கைது செய்யப்பட்ட  பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் என அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பெண்ணின் கைப்பையிலிருந்து நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பயணித்த பஸ் டிக்கட்டுகள் புகையிரத பயணச்சீட்டுகளும் இயேசு நாதரின் புகைப்படம் என்பன வைத்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர். 

 

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Comment here

error: Content is protected !!
Don`t copy text!