அரசியல்செய்திகள்

சவாலுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 முப்பதுக்கு மீண்டும் கூடவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையின் முதலாம் நாளுக்கான விவாதம் இடம்பெறவிருக்கின்றது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாளுக்கான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை மாலை நிறைவு பெறவுள்ளதோடு,தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

கடந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் அரசாங்கம்,இன்றைய தினத்திலும் நாளைய தினத்திலும் மக்கள் விடுதலை முன்னணி சமர்பித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம் நடைபெறும் என அறிவித்திருந்தது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சி ஆதரவாக வாக்களிக்க தயாராகியுள்ளதோடு அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இன்னும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்க வில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமாத்திரன்றி மலையகத்தின் பிரதான கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

அத்துடன் தமிழ் தேசியக்கூட்டடைப்பும் இது தொடர்பில் இன்னும் அறிவிக்கவில்லை.

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சதனமான தாக்குல் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற ரீதியில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Don`t copy text!