அரசியல்மலையகம்

மலையகத்தில் மோசமான வீதிகளால் உயிரிழக்கும் கர்ப்பிணி தாய்மார்கள்?

மலையகத்தில் காணப்படும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீதிகள் தூர்ந்து போயுள்ளதால் கர்ப்பிண் தாய்மார்கள் உயிரிழக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக திகழும் மலையக மக்கள் சொல்லான்னா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக மலையகத்தில் காணப்படும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீதிகள் தூர்ந்து போயுள்ளதால் அந்த வீதியூடாக வைத்தியசாலைகளுக்கு செல்லும் போதே அவர்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதற்கு முன்னால் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

error: Content is protected !!
Don`t copy text!