அரசியல்மலையகம்

மலையக மக்களைப்போல மலையக வீதிகளும் அனாதையாகியுள்ளன – வேலுகுமார்.

மலையக மக்களைப்போல மலையகத்தில் காணப்படும் வீதிகளும் அனாதையாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மலையக மக்களுக்கு இன்றளவும் ஏழு பேர்ச்சஸ் காணி கனவாக மாறியுள்ளது.

மலையகத்தின் பல பகுதிகளில் காணப்படும் குன்றும் குழியுமான வீதிகளால் எமது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

மலையக மக்களைப்போல மலையகத்தில் காணப்படுகின்ற வீதிகளும் தற்போதைய சூழலில் அனாதையாகியுள்ளது.

இதனை புணரமைப்பு செய்வதற்கோ அல்லது மீள புணரமைப்பதற்கோ எடுக்கப்படுகின்ற முயற்சிகள் மிகக்குறைவாகும்.

குறிப்பாக மலையகத்தில் காணப்படும் நகரங்களை மையப்படுத்தி சில வீதிகள் புதிதாக அமைக்கப்படுகின்றன. இதன் காரணமான தோட்டப்புற பகுதிகளில் காணப்படுகின்ற வீதிகளுக்கு அபிவிருத்தி பணிகள் தடைப்படுகின்றன.

இது தொடர்பில் மாகாண மற்றும் பிரதேச சபைகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கண்டியில் பல தோட்டப்பகுதிகளில் வீதிகள் கைவிடப்பட்டுள்ளன.எனவே அரசாங்கத்தினால் தோட்டப்புற பகுதிகளில் காணப்படும் வீதிகள் புணரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றார்.

error: Content is protected !!
Don`t copy text!