ஆன்மீகம்மலையகம்

கேகாலை அரநாயக்காவில் முதலாவது அறநெறி பாடசாலை…

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்காவில் அறநெறி பாடசாலை ஒன்று 07.07.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த அறநெறி பாடசாலை கேகாலை மாவட்ட அறநெறி ஆசிரியர்கள் ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக அரநாயக்காவில் அறநெறி பாடசாலை இல்லாமல் இருந்த குறை இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது.மேலும் இதன் மூலம் இந்து சமய மாணவர்களின் சமய ஒழுக்கங்களை முறையாக கற்பித்து வழிநடத்த இது நல்ல சந்தர்பமாகவும் அமைந்திருக்கின்றது.

இதேவேளை அம்பதெனிய பிரதேசத்தில் இதுவரை காலமும் இந்து மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் இந்து சமய பாடத்தை எந்த ஒரு மாணவரும் எழுதியதில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.எனவே இந்த அறநெறி பாடசாலை மூலம் அவ்வாறான சிக்கல் நிலைமைகளில் இருந்து மாணவர்கள் தங்களுடைய மதம் தொடர்பாக கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைய போகின்றது என்று குறிப்பிடப்படுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!