விளையாட்டு

நடப்பு சாம்பியனை இலகுவாக வீழ்த்திய இந்தியா ?

இந்திய அணி 36 ஓட்டங்களால் அவுஸ்த்திரேலியா அணியை வீழ்த்தியது.

2019 உலகக்கிண்ண போட்டியின் 14வது போட்டியாக இந்திய மற்றும் அவுஸ்த்திரேலியா அணிகள் நேற்று பலப்பரீட்சையில் ஈடுபட்டன.

இந்த போட்டி வோவள் மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை நேரடிப்படி பி.ப 03 மணி அளவில் இந்த போட்டி ஆரம்பமாகியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சர்மா மற்றும் தவான் மிகவும் சிறப்பாக விளையாடினார் .சர்மா 57 ஓட்டங்களையும் ,தவான் 117 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள அணித்தலைவர் விராட் கோலி 82 ஓட்டங்களையும் ,ஹர்திக் பாண்டியா வெறுமனே 27 பந்துகளில் 48 ஓட்டங்களையும்,தோணி 14 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.

353 என்ற இமாலய இலக்கோடு துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலியா சகல விக்கட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

அந்த அணியின் டேவிட் வாணர் 56 ஓட்டங்களையும்,ஸ்மித் 69 ஓட்டங்களையும்,கேரேய் 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தமட்டில் புவனேஷ் குமார் மற்றும் பும்பரா ஆகியோர் தலா 03 விக்கட்டுக்களை வீழ்த்த,சால் 02 விக்கட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

error: Content is protected !!
Don`t copy text!