விளையாட்டு

நடப்பு சாம்பியனை துரத்திய இங்கிலாந்து…

2019 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பாக ஸ்மித் அதிகபட்சமாக 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க,கேரேய் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணிசார்பாக வோக்கஸ் மற்றும் ரஷீட் தலா 03 விக்கட்டுகளை வீழ்த்த ஆர்ச்சர் 02 விக்கட்டுகளையும்,வூட் ஒரு விக்கடினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்தும் 224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை மாத்திரம் இழந்து இலகுவாக வெற்றிவாகையை சூடியது.

இங்கிலாந்து அணிசார்பில் ரோய் 85 ஓட்டங்களையும் ,பெய்ர்ஸ்டோ 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க,ரூட் 49 ஓட்டங்களையும்,மோர்கன் 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு இன்று சிறப்பாக அமையவில்லை என்றே குறிப்பிடலாம்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி எதிர்வரும் 14 ஆம் திகதி நியூஸிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Don`t copy text!