விளையாட்டு

நியூசிலாந்து எதிர் 20 – 20 இலங்கை குழாம் அறிவிப்பு.

Base 1

நியூசிலாந்துக்கு எதிரான 03 போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது

அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரர்களான தனுஸ்க குணதிலக்க மற்றும் தசுன் சானக்க ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன் , சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவும் அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அதிரடிய சகலதுறை வீரரான திஸ்ஸர பெரேராவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரகாசித்து வரும் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இலங்கை ஏ அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சகலதுறைகளிலும் பிரகாசித்த லஹிரு மதுஷங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரின் மூன்று போட்டிகளும் கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய சர்வதேச இருபதுக்கு 20 தொடருக்கு பின்னர் இலங்கை அணி இந்த தொடரில் விளையாடவுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!