விளையாட்டு

மாலிங்காவின் இறுதி உலகக்கிண்ண போட்டி சர்மா ,ராகுல் அசத்தல்

ஐ.சி.சி.12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 44 ஆவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே லீட்ஸ் மைதானத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 113 ஓங்களையும்,திரிமானே 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுகொண்டனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தமட்டில் பும்ரா 3 விக்கெட்டுக்களையும்,புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

265 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 03 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்களான ஷர்மா மற்றும் ராகுல் இருவருமே சதம் கடந்தார்கள்,
ஷர்மா நேற்று பெற்ற 05 வது உலகக்கிண்ண சதமானது உலகக்கிண்ண போட்களில் ஒரு வீரர் அதிகபட்சமாக பெற்று கொண்ட சதங்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக்கியது.

இங்கை அணியின் பந்து வீச்சை பொறுத்தமட்டில் விளங்கி அணியின் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் லசித் மாலிங்காவின் கடைசி உலகக்கிண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது எனினும் நேற்றய தினம் அவர் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவரோடு 82 ஓட்டங்களை கொடுத்து 01 விக்டினை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.மேலும் ரஜித மற்றும் உதான தலா ஒவ்வறு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

error: Content is protected !!
Don`t copy text!