விளையாட்டு

வலுவான நிலையில் இங்கிலாந்து வலுவிழந்த பங்களாதேஷ்?

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 106 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பபங்களாதேஷ் அணிகள் மோதிய 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இன்று கார்டிப் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களடுத்தடுப்பை செய்ய தீர்மானித்தது ,அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமக்கு வழங்கப்பட 50 ஓவர்களில் 06 விக்கட்டுகளை இழந்து 386 ஓட்டங்கள‍ை பெற்றுக்கொண்டது .அந்த அணி சார்பாக ஜே.ஜே . ரோய் 121 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 14 நான்கு ஓட்டங்கள் ,05 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 153 ஓட்டங்களை அதிக பட்சமாக தனது அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

387 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இந்த போட்டியில் 106 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

எனினும் பங்களாதேஷ் அணியின் சகலத்துறை வீரர் சகிப் அல்ஹசன் 119 பந்துகளில் 12 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 121 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சை பொறுத்தமட்டில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜேப்ர ஆச்சர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்த ,மார்க்வூட் 2விக்கெட்டுக்களையும்,பிளாங்கட் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா ஒவ்வறு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

error: Content is protected !!
Don`t copy text!