விளையாட்டு

வெற்றிக்காக தோனியும் , ஜடேஜாவும் போராடினர் ..

2019 -12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.

நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமான இந்த போட்டி மழைக் காரணமாக இன்றும் தொடர்ந்தது.

நேற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்தது.தொடர்ந்தும் மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் மீண்டும் ஆரம்பமானது.

அதன் படி 211 ஓட்டங்களுடன் தொடர்ந்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்ற்றுக்கொண்டது.

நியூஸிலாந்து அணிசார்பில் டெய்லர் 74 ஓட்டங்களையும் ,அணித்தலைவர் வில்லியம்சன் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் புவனேஷ்குமார் மிகவும் சிறப்பாக பந்து வீசி 03 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, ஆரம்ப முதலே தடுமாற தொடங்கியது.ஒரு கட்டத்தில் 05 ஓட்டங்களுக்கு இந்திய அணியின் முக்கிய 03 விக்கட்டுகளான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த வேளையில் வீழ்த்தப்பட்டன.இடைநிலை வீரர்களும் ஏமாற்றிய நிலையில் தோனியும்,ஜடேஜாவும் மிகவும் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு வந்தாலும் அது இறுதில் ஜடேஜா தோனியின் ஆட்டமிழப்போடு முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று,18 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

நியூஸிலாந்து அணி சார்பாக பந்து வீசிய ஹென்றி 3 விக்கெட்டுக்கயைும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்டனர் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும்,லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்திய அணிசார்பில் போரட்ட குணத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 77 ஓட்டங்களையும்,தோனி 50 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டாவது முறையும் உலகக்கிண்ண இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!