தொழில்நுட்பம்

தமிழில் பேசினாலே போதும், டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

ஆண்ட்ராய்டு போனில் தமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளன.

எனினும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் கீபோர்டில் உள்ள எழுத்துக்களை டச் செய்வதன் மூலமே தமிழ் மொழியை டைப் செய்து வருகின்றனர்.

இருப்பினும் நாம் எமது விரலை பயன்படுத்துவதற்கு பதிலாக குரலை பயன்படுத்தி பல மடங்கு வேகமாக தமிழ் மொழியை தட்டச்சு செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

நாம் கீழே வழங்கியுள்ள கூகுளின் GBoard செயலியை பதிவிறக்கி பயன்படுத்துவதன் மூலம் உங்களாலும் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ் வாய்ஸ் டைப்பிங் முறையை பயன்படுத்தி மிக நீண்ட கதைகள் கட்டுரைகளை கூட குறுகிய நேரத்தில் டைப் செய்து முடித்திட முடிகிறது.

மேலும் நாம் உச்சரிக்கக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் மிகத் துல்லியமாக உணர்ந்து அவற்றை தமிழ் எழுத்துக்களாக மாற்றுகிறது கூகுளின் அருமையான இந்த தொழில்நுட்பம்.

அது மாத்திரமின்றி இந்த முறையில் நாம் தமிழ் மொழியை டைப் செய்யும் போது இலக்கணப் பிழைகள் ஏற்படுவதும் மிகக் குறைவு.

குரல் மூலம் தமிழ் மொழியை டைப் செய்வது எப்படி?

  1. முதலில் G Board செயலியை கூகுள் play store இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  2. பின்னர் அதன் செட்டிங்க்ஸ் பகுதியின் ஊடாக தமிழ் மொழி கீபோர்டை தெரிவு செய்யுங்கள்.
  3. பிறகு நீங்கள் தமிழ் மொழியை டைப் செய்ய வேண்டிய இடத்திற்கு செல்க. ஜிபோர்ட் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் மைக்ரோபோன் ஐகானை அழுத்தி டைப் செய்ய வேண்டிய தமிழ் சொற்களை உச்சரியுங்கள்.

குறிப்பு: இணையம் தொடர்பு படுத்தப்பட்டிருக்க வேண்டும்

GBoard Download

Comment here

error: Content is protected !!
Don`t copy text!