தொழில்நுட்பம்

நோயாளியின் இறப்பை முன்கூட்டியே கணிக்குமா கூகுள்?

கடந்த வருடம்  மார்பக புற்றுநோயுடன் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவரின், வாழ்க்கை நீட்டிப்பு குறித்து துல்லியமான தகவல்களை கூகுள் பயன்பாடு தெரிவித்துள்ளது. தகவல் கூறியப்படி, சில தினங்களில் அந்த நோயாளி இறந்தார்.

கூகுள் நிறுவனம் தயாரித்து உள்ள பயன்பாட்டில், மருத்துவமனை மற்றும் நோயாளிகள் சார்ந்த தகவல்களை டிஜிட்டலாக பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள கூடியது. இதன் மூலம், நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை குறித்த தகவல்கள், மருத்துவமனையில் தங்கிய நாட்களின் எண்ணிக்கை, மேலும் நோயாளியின் வாழ்நாள் நீட்டிப்பு ஆகிய விவரங்கள் வரையிலும் துல்லியமாக பதிவேற்றப்படுகின்றன.

கூகுள் வசதியால், டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்ட தகவல்களினால், கையால் எழுதி வைக்கப்படும் விவரங்களின் எண்ணிக்கை குறையும். அதுமட்டுமின்றி, தகவல்கள் தேடி அலைவதற்கான நேர சேமிப்பு அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் அடுத்த முயற்சியாக, உடலில் உள்ள நோய் அறிகுறிகள், நோய் தாக்கங்கள் ஆகியவற்றை கண்டறியும் கருவிகளை வடிவமைத்து வருகின்றது.

கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை பல ஆண்டுகால ஆய்விற்கு பிறகு, எளிய முறை வசதிகளை கண்டுபிடித்து வருகின்றன. ஆல்பபெட்ஸ் எனப்படும் எழுத்துகளின் மூலம் பதிவு செய்து, விவரங்களை சேகரித்து வைக்கின்றன. அல் மூலம் நேரம், பணம் ஆகியவற்றை சேமிக்க முடியும்.

மருத்துவ விவரங்களை பதிவு செய்வது கூகுள் அல்- ஆரோக்கியம் சுகாதாரம் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இந்தியாவில் இந்த வசதியை சோதனை செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது, கண்களை சோதனை செய்து அதன் மூலம் டையாபெடிக் ரெடினோபதி எனும் நோய் உள்ளதா என கண்டறிய முடியும்.

கூகுளுக்கு எதிரான மைக்ரோசாப்ட் நிறுவனமும் அல் முன்னறே அறியும் மருத்துவ நோய்கள் குறித்த ஆய்வில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!