தொழில்நுட்பம்

முப்பரிமாண பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட கருப்பை

பிள்ளைப்பேறு இன்மைக்கு கருப்பைகளில் ஏற்படும் குறைபாடுகளும் காரணமாக அமைகின்றன.இவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விஞ்ஞானிகள் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தினை அணுகியுள்ளனர்.

இதன்படி முதன் முறையாக சுண்டெலிகளுக்கான கருப்பை உருவாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பையின் ஊடாக மூன்று வாரங்களில் கரு முட்டைகள் வெளியாகியுள்ளதுடன், குட்டி ஒன்றினையும் எலி பிரசவித்துள்ளது.

இந்த வெற்றிகரமான பரிசீலிப்பினை தொடர்ந்து தற்போது மனிதர்களில் 3டி கருப்பையினை பயன்படுத்தும் சாத்தியம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சிக்காக்கோவில் உள்ள Northwestern பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.குறித்த கருப்பையினை உருவாக்குதவற்கு 99 சதவீத நீரைக் கொண்ட ஹைட்ரோ ஜெல் மற்றும் பொலிமர் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

மனிதர்களிலும் இப் பரிசோதனை வெற்றியளிப்பின் கருப்பை புற்றுநோய் உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!