உலகம்

ஆண்களின் பிறப்புறுப்பைக் கடித்துக் குதறும் மர்மநபர் – சென்னையில் சம்பவம்!

Base 1
சென்னை ரெட்டேரி மேம்பாலம் அருகில் கடந்த வாரம் கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார்.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மீண்டும் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த நாராயணன் அதே ரெட்டேரி மேம்பாலம் கீழே மதுபோதையில் உறங்கியுள்ளார். நள்ளிரவில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது பிறப்புறுப்பை கடித்துக் குதறியுள்ளார். இதில் நாராயணன் அதிஷ்டவசமாக அங்கிருந்து உயிர் தப்பினார். இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாதவரம் காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டிவி கேமராவின் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!
Don`t copy text!