உலகம்

தன்சானியாவில் படகு விபத்து : 44 பேர் பலி!

தன்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் ஒரு படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரியினூடாக சுமார் 400இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தித்திற்கு அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்து குறித்த பகுதிக்குச் சென்ற மீட்புக்குழுவினர் 100இற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!