உலகம்கல்வி

மாணவர்களின் ரூ.278 கோடி கல்விக்கடனை ஏற்பதாக அறிவித்த அமெரிக்க கோடீஸ்வரர்!

Base 1

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் புகழ்பெற்ற Morehouse கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக Robert F Smith அழைக்கப்பட்டிருந்தார்.

Vista Equity Partners என்ற பங்குச்சந்தை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இவர் கருப்பினத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த விழாவில் உரையாற்றிய Robert F Smith, இந்நாட்டில் 8 தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம், எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களது வாழ்வில் சிறிய அளவிலான உதவியினைச் செய்யவுள்ளோம்.

உங்கள் அனைவரினதும் கல்விக் கடனையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் கல்விக் கடனை செலுத்தத் தேவையில்லை என்று அதிரடியாக அறிவித்தார்.

அந்த கல்லூரியில் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் கல்விக் கடன் இந்திய மதிப்பில் சுமார் 278 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

error: Content is protected !!
Don`t copy text!