உலகம்

வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை?

தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி வைகோவுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் வைத்து , தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனால் வைகோவின் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டுட்டு துரிதப்படுத்தப்பட்டது.

இன்று தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

எனினும் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தான் மேன்முறையீடு செய்யவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

error: Content is protected !!
Don`t copy text!