உலகம்

17 கோடி பரிசு: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் சிறுவன்.. !!

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னை பையன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை. சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார்.

வெற்றி தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார் லிடியன். 14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த லிடியன் ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்திவிட்டார்.

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மினி மேஸ்ட்ரோ என்று செல்லமாக அழைக்கப்படும் லிடியனுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சூர்யா பியானோ வாசித்து சாதனை படைத்த லிடியனுக்கு நடிகர் சூர்யாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சதீஷ் லிடியனின் தந்தை சதீஷ் இயக்குநர் வெங்ட் பிரபுவின் நண்பர். முன்னதாக லிடியனை பாராட்டி நடிகர் ஜேம்ஸ் கோர்டன் வெளியிட்ட வீடியோவை ரீட்வீட் செய்து பெருமை அடைந்திருந்தார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!