...
செய்திகள்

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தினரால் மலையகம்.lk ஊடகவியலாளர்கள் இருவர் கௌரவிப்பு.!

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா இன்று கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு இலங்கையின் பல்துறையைச் சார்ந்த கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வினை பெருகேற்றும் வகையில் பல கலை நிகழ்வுகளும் இடம்பெறிருந்ததோடு பலர் மேடையேற்றி கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் மலையகம்.lk யின் இரு ஊடகவியலாளர்களும் மேடையேற்றி கௌரவிக்கப்பட்டனர்.

தனது அயராத உழைப்பினால் தனக்கென ஊடகத்துறையில் தனி இடத்தைப்பிடித்துக்கொண்ட தேவராஜ் அவர்களும், மலையக மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற சமூக நோக்கோடு உழைக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், மலையகம் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் நிறுவுனருமாகிய தனபாலசிங்கம் அவர்களும் இந்நிகழ்வில் அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தினரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen