மலையகம்
‘அகவரி -காண்பியக் கலைக் கண்காட்சி’ இன்றுவரை நீடிப்பு
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ‘அகவரி -காண்பியக் கலைக் கண்காட்சி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இன்றும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சி 26ஆம் திகதி ஆரம்பமானது.
இக்கண்காட்காட்சியில் கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை சித்திரப்பிரிவு மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்பங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் மற்றும் பெருந்திரலான பாடசாலை மாணவர்களும் கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு வருகைதருகின்றனர்.
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கடந்தவருடமும் மலையக மண் சார்ந்த மாபெரும் கண்காட்சியான ‘மலையக வரலாறும் வாழ்வியலும் கண்காட்சி ‘இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.