சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

அகவை 1’ல் மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பு!

‘வாழ்க தமிழ் வளரட்டும் மலையகம்’
31.03.2022 இன்று மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பு தனது 1வது அகவையை பூர்த்தி செய்துள்ளது.
மலையகத்தில் இருந்து தொழில் நிமித்தமாக கடல் கடந்து சென்ற எமது தாய்மார்கள் தந்தைமார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் தாம் உழைக்கும் ஊதியத்தில் சிறு நிதியை நமது சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கி பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அந்த வகையில் மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பானது கடந்த வருடம் இதே போன்றதொரு நன் நாளில் நல்லுள்ளங்கள் ஒன்றிணைந்து ‘மலையகத்தின் உரிமைக்குரல்’ என்ற நாமத்துடன் இந்த அமைப்பை செதுக்கினார்கள்.
அன்று தொடக்கம் இன்று வரை ஹட்டன், கண்டி, நாவலப்பிட்டி, புசல்லாவை, கம்பளை, நுவரெலியா, பதுளை என மலையகத்தின் பல பாகங்களிலும் தங்களது உதவி கரங்களை நீட்டி உள்ளனர்.
கொவிட் காரணமாக வருமானத்தை இழந்த குடும்பங்கள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உதவிகள், மருத்துவ தேவை உடையோருக்கான உதவிகள், விசேட தேவையுடையோர்க்கான உதவிகள், பெண் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களுக்கான உதவிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிகள் என பலதரப்பட்ட உதவிகளை நமது மலையக சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான  தேவைகளை உணர்ந்து பல வெற்றிகரமான செயற்திட்டங்களை நிகழ்த்திய வண்ணமுள்ளனர்.
இவ்வாறு கடந்த ஒரு வருடத்தில் 65 செயற்திட்டங்களை சிறப்பான முறையில் அமைப்பின் தலைவி திருமதி கனகா அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், உப தலைவர் திரு மூர்த்தி அவர்களின் வழிநடத்தலில், செயலாளர் திரு சிவா அவர்களின் தூர நோக்கு சிந்தனையுடன், அமைப்பின் ஏனைய அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன், இலங்கையில் இருந்து பணியாற்றும் சக அங்கத்தவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் இத்தனை செயற்திட்டங்கள் நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெற்றிருக்கின்றமை விசேட அம்சமாகும்.
அத்துடன் இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அமைப்பில் இருக்கும் அங்கத்தவர்கள் மட்டுமில்லாது வெளியிலிருந்தும் பல நல்லுள்ளங்கள் உதவிக்கரம் நீட்டி ஆரவாரமின்றி தங்களது மனிதநேயமிக்க சமூகப்பணியினை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மலையகத்தின் உரிமைக்குரல் சார்பாக இதயம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

இந்த ஒரு வருட பயணத்தில் சமூக அக்கறையுடன் செயற்படும் அமைப்பின் அங்கத்தவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் நோக்கில் சுயதொழில் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அகவை 1 காணும் எமது மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பானது தனது 66 வது செயற்றிட்டத்தை நுவரெலியா – சாந்திபுர Oliphant தமிழ் மகா வித்தியாலயத்தில் நடாத்தியது. அங்கு கல்வி பயிலும் 155 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
உங்கள் அனைவரதும் ஆசியுடன் எமது சமூகப்பணி இன்னும் பல்லாண்டு காலம் தொடருவோம்.
நன்றி.
இதே போன்று நீங்களும் சமூக பணியில் எம்மோடு கரம் கோர்க்க இணைந்திடுங்கள்.
மூர்த்தி – +965 9093 7975
சிவா –  +966 53 122 0807

Related Articles

Back to top button