அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்ற மாணவன்!

2018 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மகேந்திரன் திகழொலிபவன் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
மாணவனது தாய் தாதியராக பணிபுரியும் அதேநேரம் தந்தை அரச திணைக்களமொன்றில் பணியாற்றி வருகின்றார்.
தனது வெற்றிக்கு பெற்றோரும் ஆசிரியருமே காரணம் எனஅம் மாணவன் தெரிவித்துள்ளார். எதிர்கால இலட்சியம் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்று அந்த மாணவன் கூறியுள்ளார்.
மேலும், சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் நவஸ்கன் நதி என்ற மாணவனும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.